இது emailல் வந்தது...
ஒரு கிராமத்துப் பக்கமாக ஒரு வேன் நிறைய அரசியல்வாதிகள் போய்க்கொண்டிருந்தார்கள்.
திடீரென்று வேன் ஒரு பள்ளத்தில் கவிழ்ந்து அதில் பயணம் செய்த அனைவரும்
அடிபட்டார்கள்.
அப்போது அங்கே தோட்டவேலை செய்துகொண்டிருந்த ஒரு கிழவன் வந்தான். வந்தவர்கள்
அனைவரும் இறந்துவிட்டார்கள் என்று முடிவு செய்து ஒரு பெரிய குழியாகத் தோண்டி
அனைவரையும் புதைத்துவிட்டான்.
ஒரு வாரம் கழித்து ஒரு போலீஸ் அதிகாரி அங்கே வந்தார்.
அங்கே கவிழ்ந்து கிடந்த வாகனத்தைப் பார்த்தார். இதில் வந்தவர்கள் எல்லாம் எங்கே
என்று அந்தக் கிழவனிடம் கேட்டார்.
அனைவருமே இறந்துவிட்டதால் அவன் புதைத்து விட்டதாகக் கூறினான். அனைவருமே இறந்து
விட்டார்கள் என்று உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்...".ம்...ம்... ஒண்றிரண்டு
பேர்கள் தாங்கள் சாகவில்லை என்று கூறினார்கள்.
ஆனால் அரசியல்வாதிகள் எப்போதும் உண்மை பேசமாட்டார்கள் என்று
கேள்விப்பட்டிருக்கிறேன்" என்று கிழவன் பதில் கூறினான்.
Thursday, September 30, 2010
Sunday, September 26, 2010
பறவையும் வியாபாரியும்
அழகிய பறவை ஒன்றை விலைக்கு வாங்கி அதைக் கூண்டில் வைத்து ஒரு வியாபாரி வளர்த்தான்.ஒரு நாள் அப்பறவை அவனிடம்,தன்னை விடுதலை செய்தால், வாழ்வை வளமாக்கும் மூன்று பொன்மொழிகள் சொல்வதாக கூறியதன் பேரில் வியாபாரி அதை விடுவிக்க ஒப்புக் கொண்டான்.வியாபாரியின் கையிலிருந்து ஒரு பொன்மொழியையும் அவன் வீட்டுக் கூரையில் அமர்ந்து இரண்டாவது பொன்மொழியையும் தோட்டத்தில் உள்ள மரக் கிளையில் அமர்ந்து மூன்றாவது பொன்மொழியையும் கூறுவதாகப் பறவை கூறியது.
வியாபாரி அதன் படி கிளியை விடுவித்து தன கையில் வைத்துக் கொண்டான்.பறவை''உன் வாழ்வில் எதையாவது இழக்க நேர்ந்தால்,அது உன் உயிருக்கு சமமானதாக இருந்தாலும் அதைப் பற்றி வருந்தாதே.''என்றது.
திருப்தியுற்ற வியாபாரி பறவையைக் கையிலிருந்து விட அது கூரையில் அமர்ந்து சொன்னது,''ஆதாரமில்லாத எந்த ஒன்றையும்,உன்னுடைய கண்களைக் கொண்டு நீயே பார்க்காத வரை நம்பி விடாதே.''
அடுத்து வியாபாரி பிடிக்க முடியாத அளவுக்கு ஒரு உயர்ந்த மரக்கிளையில் அமர்ந்து கொண்டு கூறியது,''முட்டாள் வியாபாரியே,என் வயிற்றில் இரண்டு விலை உயர்ந்த ரத்தினங்கள் உள்ளன.என்னைக் கொன்று என் வயிற்றிலிருந்து அவற்றை எடுத்திருக்கலாம்.''
இதைக் கேட்டவுடன் வியாபாரி ஆத்திரம் கொண்டான்.வருந்தினான்.ஆனாலும் பிடிக்க முடியாதே என்ற கவலையுடன் மூன்றாவது பொன் மொழியையாவது கூறும்படி பறவையிடம் சொன்னான்.பறவை நகைத்துக் கொண்டே,''என்னப்பா,நான் சொன்ன முதல் முதல் இரண்டு பொன் மொழிகளே உனக்கு புரியாத போது,மூன்றாவது எதற்கு?''என்று கேட்டது.'என்ன சொன்னாய்?எனக்கா புரியவில்லை?'என்று கோபமுடன் கேட்டான் வியாபாரி.
''ஆமாம்,இழந்து போனதற்காக வருந்தாதே என்றேன்.நீயோ இரண்டு ரத்தினக் கற்களுக்காக எரிச்சல் படுகிறாய்.கண்ணால் காணாததை நம்பாதே என்றேன்,நீயோ என் வயிற்றில் இரண்டு ரத்தினங்கள் இருப்பதாகக் கூறியதை நம்பினாய்.முட்டாளே!என் வயிற்றில் இரண்டு ரத்தினக் கற்கள் இருந்தால் என்னால் உயிரோடு இருக்க முடியுமா?''என்று கூறிப் பறந்து சென்றது அப்பறவை. !!!!
Thursday, September 23, 2010
பொன்மொழிகள்
மதுக்கடையில் - மறப்பதற்காக குடிப்பவர்கள், குடிப்பதற்கு முன்பே பணம் கொடுத்துவிடும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
***
ஒவ்வொரு மாபெரும் மனிதனுக்குப் பின்னாலும், ஒரு பெண் ஆச்சரியத்துடன்.
***
மனைவி என்பவள் உனக்கு வரும் கஷ்டங்களைத் தாங்க உன்னுடன் துணையாக இருப்பவள். (நீ தனியாக இருந்திருந்தால் அந்த கஷ்டங்களே வந்திருக்காது என்பது வேறுவிஷயம்)
***
புகை பிடிப்பது எடை குறைய உதவும்...ஒவ்வொரு நுரையீரலாக
***
குடிப்பதில் உள்ள தீமைகளைப் பற்றிப் படித்ததும், நான் விட்டுவிட்டேன்.. படிப்பதை.
***
உன்னுடைய குழந்தைகள் பெரியவர்கள் ஆகிறார்கள் என்பதை நீ உணர்வது, உன்னுடைய மகள் லிப்ஸ்டிக் போட்டிருக்கும்போதோ, உன் மகன் லிப்ஸ்டிக்கை அழிக்கும்போதோ...
***
நான் எப்போதும் ஒரு காலியான பால்டப்பாவை பிரிட்ஜில் வைத்திருப்பேன். யாரேனும் கடுங்காப்பி கேட்டால் என்ன செய்வதென்றுதான்.
***
கண்டுபிடிப்பின் தாய், மாட்டிக்கொள்வதுதான்
***
சிரித்தால் உலகம் கூட சிரிக்கும். குரட்டைவிட்டால் தனியாகத்தான் தூங்க வேண்டும்.
***
இந்த பிரபஞ்சத்தில் புத்திசாலியான உயிர்கள் இருக்கின்றன என்பதன் நிரூபணம், யாரும் நம்மை இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என்பதுதான்.
***
குழந்தைகளைப் பெறும்போது தங்கப்புதையல் போலத்தான் தோன்றுகிறது. கடைசியில் பார்த்தால், பைத்தியம் பிடித்த பெற்றோரும், எதற்கெடுத்தாலும் அழுதுகொண்டே உன்னை உதைக்கும் பிள்ளைதான் கிடைக்கிறது..
***
தேவையான வயது வரும்முன்னர் உங்கள் குழந்தைகளை வண்டியோட்ட அனுமதிக்காதீர்கள். இல்லையென்றால் அவர்களால் எப்போதுமே வண்டி ஓட்ட முடியாது.
***
பியூட்டி பார்லர் முன்பு இருந்த வாசகம். 'இங்கிருந்து வெளியே செல்லும் அழகிகளைப் பார்த்து விசிலடிக்க வேண்டாம். அவள் ஒருவேளை உன் பாட்டியாக இருக்கலாம் '
***
கையிலே சுத்தியல் தான் இருந்தால் பார்ப்பதெல்லாம் ஆணிபோலத்தான் இருக்கும்.
***
சுட்டது : eegarai

Subscribe to:
Posts (Atom)